வெள்ளி, 20 மே, 2011

மகளுக்காக வருந்தும் தந்தையின் நிலையில் உள்ளேன்: கருணாநிதி

எந்தத் தவறும் செய்யாத தனது மகள் கைது செய்யப்பட்டால் ஒரு தந்தையின் நிலை எவ்வாறு இருக்குமோ அந்த நிலையில் தான் உள்ளதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு நீதிமன்றம் பிணைய விடுதலை மறுத்துவிட்டதையடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட செய்தி வந்த பிறகு, மயிலாப்பூர் சிஐடி காலனி வீட்டில் திரண்ட செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி இவ்வாறு கூறியுள்ளார்.

“எந்த தவறும் செய்யாத தனது மகள் கைது செய்யப்பட்டால் அவளின் தந்தை என்ன மன நிலையில் இருப்பாரோ அந்த நிலையில்தான் நானும் உள்ளேன்” என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.

கனிமொழியை பிணையில் எடுக்க சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருவதாகவும் கருணாநிதி கூறியுள்ளார்.
கனிமொழி கைது விவகாரத்தால் காங்கிரஸ் கட்சியுடனான உறவு முறியுமா என்று கேட்டதற்கு நேரடியாக பதில் அளிக்காத கருணாநிதி, மற்ற கட்சிகளுடன் நல்லுறவு வைத்திருப்பதையே தி.மு.க. விரும்புகிறது என்று கூறியுள்ளார்.

http://tamil.webdunia.com

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

ஆஹா இப்போது தானா பெற்றபாசம் தெரிகின்றது. ஆயிரமாயிரம் குழந்தைகளை சிங்கள கொடூங்கோலனுடன் சேர்ந்து இந்திய நாசகார நாடும் அழிக்கும் போது எத்தனை தாய் தந்தையர் கதறியழுதிருப்பார்கள்.கையேந்தி உயிர்ப்பிச்சை கேட்டனரே. அப்போது இந்த பாசம் அரசியல் ஆசையால் இல்லாமல் போனதா? தனக்கு வரும் போது தான் தலையிடியும் காச்சலும். அனுபவி ராஜா அனுபவி.