தமிழக தேர்தலில் திமுகவின் பிரசார பீரங்கியாக மாநிலம் முழுவதும் பயணம் செய்து விஜயகாந்தை தாக்கோ தாக்கென்று தாக்கிய வடிவேலுவின்; நிலை அவரே ஒரு படத்தில் கூறியது போல இரட்டை ரயருக்குள் மாட்டிய சுண்டெலி போல ஆகிவிட்டது..
தேர்தல் முடிவு அதிமுகவுக்கு சாதகமாக வரும் என்பதை வாக்கு எண்ணிக்கை ஆரம்பத்திலேயே கணித்த நடிகர் வடிவேலு சென்னையில் இருந்து அவசரம் அவசரமாக மதுரைக்கு புறப்பட்டுச் சென்று மத்திய அமைச்சர் அழகிரி வீட்டுக்கு சென்று ஆலோசனை நடத்தினார். பின்னர் வெளியே வந்த அவர் தோல்வி குறித்து கருத்து சொல்ல மறுத்து விட்டார்.
சென்னையில் அவருக்கு அச்சுறத்தல் இருப்பதால் அவரை சென்னைக்கு வர வேண்டாம் என்று காவல்துறையினர் கூறிவிட்டனர்
இதனால் மதுரையிலேயே தங்கியிருக்கும் வடிவேலு தேர்தல் தோல்வி பற்றி அந்தர் பல்டியடித்து பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் ‘ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்பி இருக்கிறார்கள். அது நடந்து இருக்கிறது. தமிழக மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குகிறேன். தி.மு.க வைப்போல் அம்மாவின் அதிமுகவும் ஒரு பெரிய கட்சி. அந்த கட்சியை வைத்துதான் விஜயகாந்தின் கட்சியும் ஜெயித்து இருக்கிறது. விஜயகாந்தை வைத்து அ.தி.மு.க. ஜெயிக்கவில்லை.அதாவது பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும் என்று சொல்வார்களே அது போலத்தான் அம்மாவினுடைய செல்வாக்கால் விஜயகாந்தும் வெற்றியடைந்திருக்கிறார்
மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பியதால் ஜெயலலிதா அம்மா இப்போது முதல்வர் ஆகியிருக்கிறார். இந்த சூழ்நிலையில் விஜயகாந்த் கட்சியை சேர்ந்தவர்கள் மீண்டும் என் வீட்டின் மீது கல்வீசி தாக்க முயன்று இருக்கிறார்கள்.
என் வீட்டையே சுற்றி சுற்றி வருகிறார்கள். தேர்தலில் ஜெயித்தால் அடுத்து மக்களுக்கு என்ன நன்மைகள் செய்வது? என்று யோசிப்பவர்தான் நல்ல தலைவர். ஜெயித்து விட்டோம் என்பதற்காக என்னையும் என் குடும்பத்தினரையும் அடிப்பதற்கு அலைவது எந்தவிதத்தில் நியாயம்? இது நல்லாயில்லை.
கப்டன் தொலைக்காட்சி மூலம் மூன்று பேர் என்னை பகிரங்கமாக மிரட்டுகிறார்கள். விஜயகாந்த் இனிமேலாவது நல்ல தலைவராக நடந்துகொள்ள வேண்டும். என் வீட்டுக்கு ஆள் அனுப்புவதை இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்’’ என்று வடிவேல் கூறியுள்ளார்.
0
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக