முள்ளிவாய்க்கால் பேரவலம் என்பது இந்திய சிறீலங்கா அரசுகளின் கூட்டுச் சதியாலேயே நடத்தது என்பது தெரிந்த விடயம் தான். இந்த பேரவலம் நடப்பதற்கான வன்னிப் பெரும் பேருக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கியது மத்தியில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசும் அதன் விசுவசமான வெளியுறவு கொள்கை வகுப்பாளர்களும் என்பது ஊரறிந்த விடயம்.இந்தியா இராணுவம் வன்னிப் போரிலே பங்கு பற்றியதற்கான நேரடிச் சாட்சிகளும் நிழல்பட மற்றும் காணொளி ஆதாரங்களும் இருக்கின்றன.
வன்னிப்போரை நிறுத்தி மனிதப் பேரழிவை இனப்படுகொலையை தடுத்து நிறுத்த சர்வதேசம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு தடையாக நின்று சிங்கள பௌத்த பேரினவாதிகளை காப்பாற்றியது இந்திய அதிகார வர்க்கம் என்பதும் அனைவருக்கும் தெரியும்.
இனப்படுகொலை தொடர்பான சர்வதேச சட்டப்படி இனப்படுகொலை புரிந்தவர்களுக்கு மட்டுமல்ல அதற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கும் தண்டவழங்கப்பட வேண்டும். இந்த அடிப்படையிலே தான் யூதர்களை இனப் படுகொலை செய்த நாசிகளுக்கு அந்தக் காலத்தில் ஒத்துழைப்பு வழங்கினார் என்ற குற்றச் சாட்டின் பேரின் 92 வயது நபர் ஒருவருக்கு அண்மையில் ஜேர்மனியல் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
இந்த வகையில் கலைஞர் நிலை என்ன என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்.இவர் போரை நிறத்துகிறேன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறேன் அவர்களுடன் பேசுகிறேன் என்று கூறியே தமிழத்தில் இந்தப்படுகொலைகளை தடுப்பதற்காக எழுந்த ஜனநாயக முறையினலான முயற்சிகளை திசைதிருப்பியிருக்கிறார்.
ஏல்லாவற்றுக்கும் மேலாக உண்ணாவிரதம் இருக்கறேன் என்று கூறி விளம்பரப்படுத்திவிட்டு அங்கே போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கிறது. மக்கள் காப்பாற்றப்படுவார்கள் என்று கூறி தனது உண்ணா விரதத்தை முடித்திருக்கிறார்.இதன் மூலம் வன்னி மக்களை காப்பாற்ற வேண்டும் என்று ஒன்று திரண்டு குரல் கொடுத்த தமிழக மக்களை அவர் திசை திருப்பியிருக்கிறார்.
இந்த திசை திருப்பலுக்கு பின்பு தான் அங்கு முள்ளிவாயக்கால் பேரவலம் நடந்ததும் பல்லாயிரக் கணக்கான மக்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களில் கொல்லப்பட்டதுமான போர் குற்றம் மற்றும் பாரிய இனப்படுகொலை நடந்தது.
இதில் கலைஞரின் பங்கென்ன? கேட்கப்படவேண்டிய கேள்வி?
4 கருத்துகள்:
இப்படியெல்லாம் ஒரு பதிவு போடுவதற்க்கு மனம் கூசவில்லை உமக்கு? யார் மீது என்ன குற்றம் சுமத்துவது? போதும் .இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். ராஜீவ் படுகொலைப் பழியை அவர் மீதும் கழகத்தின் மீதும் சுமத்தி இது வரை குளிர் காய்ந்தது போதும்.மறுபடியும் ஒரு வீண்பழியை சுமத்தும் பாவத்தை செய்யாதீர்.உண்மையான தன்மான தமிழர்கள், பார்ப்பனீய சதிவலையில் விழாத தமிழர்கள் அவர் பின் அணிவகுத்து நிற்கின்றார்கள் என்பதை மறந்து விட வேண்டாம்.
வெற்று பரபரப்புக்காக எழுதப்பட்ட மிகவும் கீழ்த்தரமான பதிவு. தன் நேரடி மேற்பார்வையில் கலவரம் நடத்திய மோடியே தைரியமாக வந்து செல்கிறார். அதை எல்லாம் பேசாமல் ஏன் இப்படி கேவலமாக
சரியான கேள்வி! உண்மையை சொன்னால் அரசுப் பொறுப்பில் அன்றைக்கு இருந்த கருணானிதியின் கேவலமான, போலியான உண்ணானிலை போராட்டம் பற்றி கேள்விப்பட்டுத்தான் அதை நம்பி பல பொது மக்கள் ராணுவத்திடம் சரணடைய வந்து பின்னர் படுகொலை செய்யப் பட்டிருப்பார்கள். ஆகவே கண்டிப்பாக அவர் போர்க்குற்றவாளியாக சேர்க்கப் பட வேண்டும். கிட்டத்தட்ட 20 வருடம் தி மு க அனுதாபியாகவும் சில காலம் கட்சி உறுப்பினராக இருந்தும் சொல்கிறேன்! கண்டிப்பாக அவர் போர்க்குற்றவாளியாக சேர்க்கப் பட வேண்டும். திருமுகம், கோவை.
கலைஞரின் விசுவாசிகளுக்கு இது கோபத்தை தரலாம். நாங்கள் பறிகொடுத்த உறவகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து நாற்பத்தி ஆறாயிரம் பேர். யுத்தம் நிறத்தப்பட்டுவிட்டது என்று அவர் அறிவித்த பின்னர் அதாவது மே17 18 இரு தினங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்துக்கும் அதிகம்.
அவர் நினைத்திருந்தால் ஆட்சியை தூக்கி எறிந்து தமிழக மக்கள் மக்கள் அனைவரையும் ஓரணியில் திரட்டி உறுதியாக ஜனநாயக வழியில் போராடியிருந்தால் எங்கள் உறவுகளை நாங்கள் காப்பாற்றி இருக்கலாம்.அடிக்கடி ஈழத்தில் சகோதர யுத்தம் என்று வார்த்தைகளை உதிர்க்கும் அவர் தமிழகத்தில் ஈழத்தில் எங்கள் உறவுகள் மரண ஓலம் எழுப்பியபோது ஜெயலலிதா அழைத்து நாங்கள் ஒன்ற பட்டுகுரல் கொடுப்போம். ஓன்றபட்டு போராடுவோம் என்று செயலில் செய்து காட்டினாரா?
என்னுடைய இனம் அழிக்கப்படும் போது நான் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன் என்று கூறி கட்சி வேறுபாட்டை கடந்து அவர் ஜெயலலிதாவை தேடிச் சென்று வாருங்கள் ஒன்று பட்டு போராடி எங்கள் இனத்தைக் காப்பாற்றுவோம் என்று கேட்டிருந்தால் அவர் வரலாற்றில் உயரிய இடத்தை பிடித்திருப்பார்.
ஜனநாயக அரசியலில் ஈடுபட்டுள்ள திமுகவும் அதிமுகவும் சேரமுடியாத நிலை இருக்கும் போது ஆயுதப் போராட்டம் நடத்திய விடுதலைப்புலிகள் மற்ற அமைப்புக்களை அழித்தார்கள் என்று கூறுவது பொருத்தமற்றது.
இப்போது கூட மத்திய போர் நிறுத்தப்பட்டு விட்டதாக எனக்கு பொய்யான தகவலை தெரிவித்தார்கள்.மத்திய அரசின் அதிகாரிகளின் தவறான கையாழ்கையும் தமிழன விரோதப் போக்கும் முள்ளிவாக்காலில் அதிகளவு மக்கள் கொல்லப்படுவதற்கு பகிரங்கமாக அந்த அதிகாரிகைளை நோக்கி போர் கொடி தூக்கியிருக்க வேண்டும்.அதை ஏன் அவர் செய்ய வில்லை.?
பாவம் அவரால் அதை செய்ய முடியாது என்று எங்களுக்குத் தெரியும்
கருத்துரையிடுக