ஐ.நா பாதுகாப்புச்சபையில் அங்கம் வகிக்கும் 15 நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்காக அந்த நாடுகளின் தலைவர்களுக்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தனிப்பட்ட ரீதியாக கடிதங்களை அனுப்பவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பாதுகாப்புச்சபை மற்றும் மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்காக சிறிலங்கா அரசின் உயர்மட்டக் குழுக்களை பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கைக்கு எதிராக சிறிலங்கா அரசுக்கு ஆதரவு தேடும் வகையிலேயே இந்தப் பயணங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
வெசாக் பண்டிகைக்குப் பின்னர் அரசகுழுவின் பயணங்கள் இந்தப் இடம்பெறவுள்ளன.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான இந்தக் குழுவில் பிரதமர் டி.எம்.ஜெயரட்ண, அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் இடம்பெறவுள்ளனர்.
வடக்கு,கிழக்கைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரையும் இந்தக் குழு ரஸ்யா, சீனா போன்ற நாடுகளுக்கு அழைத்துச் செல்லவுள்ளது.
ஐ.நா பாதுகாப்புச் சபை மற்றும் மனிதஉரிமைகள் பேரவை ஆகியன அடுத்த மாதம் கூடவுள்ள நிலையிலேயே சிறிலங்கா அரசாங்கம் இந்த நடவடிக்கையில் இறங்கவுள்ளது.
இந்தியா, சீனா, ரஸ்யா போன்ற நாகளுக்கு சிறிலங்கா அதிபர் பயணம் செய்து ஆதரவு தேட வேண்டும் என்று ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
எனினும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொள்வது தொடர்பாக இன்னமும் முடிவு செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.
அதேவேளை, ஏனைய பல நாடுகளுக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரை அனுப்பி ஆதரவு தேட மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக