சனி, 14 மே, 2011

அ.தி.மு.காவின் அமோக வெற்றி, ஜெயலலிதாவிற்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கை சமிக்ஞை,

ஈழத்தமிழருக்கு காலம் கொடுத்த அரசியல் அவதான நகர்வு - க.வ.ஜெயதாசன்




தமிழநாட்டின் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.கா வெற்றி பெற்றமை பல்வேறுபட்ட அரசியல் சமூக நகர்வுகளுக்குட்பட்டவையே.தமிழ்நாட்டின் அரசியல் நிர்வாகத்தை வழிநடத்த ஒரு மாற்றம் தேவை என்பதை தமிழக மக்கள் மிகத் தெளிவாகவே உணர்த்தியுள்ளார்கள்.

மக்களை ஆள்வது என்பதே பிழையான கருத்தாகும்.மக்களுக்குத் தேவையானவற்றை செய்து கொடுப்பதும் மக்களுக்கு தொண்டாற்றுவது என்பது அரசியலின் பண்பாகவும் விழுமியமாகவும் இருக்க வேண்டுமென்பதை மக்கள் தமிழகத்தை நிர்வகித்த தி.மு.க ஆட்சிக்கு உணர்த்தி அக்கட்சியை படுதோல்வியடையச் செய்த அதே அமோக வெற்றி பெற்ற அ.தி.மு.காவிற்கு தமது அமோக ஆதரவின் மூலம் எச்சரிக்கை சமிக்ஞையை காண்பித்துள்ளார்கள்.

கால மாற்றம், தமிழக மக்களுக்குள் விரவி பரவி நிற்கும் இளந்தலைமுறையினரின் மாற்றத்தை விரும்பும் சிந்தனை மாற்றம,; அரசியல் சார்ந்த அடிப்படைக் கருத்து இந்த மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

தி.மு.க அல்லது அ.தி.மு.கா மாறி மாறி தமிழகத்தின் அரசினை நடத்தி வந்திருக்கின்றன.ஆனால் இந்த தேர்தலில் பல்வேறுபட்ட தி.மு.காவின் சர்வாதிகாரப் போக்கே தி.மு.காவை படுதோல்வியடையச் செய்துள்ளது.

வெறும் தமிழறிவு மட்டும் அரசியலாகாது என்பதை கலைஞர் உணரவில்லையா என்பதும் கேள்வியாகின்றது. தமிழ்மொழியினை பாதுகாக்க வேண்டும் என்பதும் ஒரு அரசின் கடமைதான்.ஆனால் ஒவ்வொரு மனிதனதும் வாழ்வு என்பதன் கருவி அவன் உடலே.அவன் உயிர் வாழ்வதற்கு தேவையான மிக மிக முக்கியமான உணவு நீர் போன்றவையும் அவன் பகாதுகாப்பாக வாழ்வதற்கு வீடும் தேவை.அவற்றை கொடுப்பதற்கு இலவசம் என்பது நீண்ட காலத்திற்கு அவனது தேவையை பூரத்தி செய்யப்பட மாட்டாது.மாறிவரும் உலக பொருளாதாரத்தினை நுண்ணறிவோடு நோக்கி மக்களுக்கான வேலைவாய்ப்பு உணவுப்பொருட்களை எல்லா மக்களும் தங்கள் வருவாய்க்கேற்ப வாங்கக்கூடிய இலகுமுறை பொருளாதாரம் உபரிப் பொருளாதார அணுகுமுறைகளை கொண்டிராது, அமைச்சர்கள் தனக்குத் தேவையான அதிகாரிகள் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுக்கென ஒரு ஆட்சியை நடத்திய தி.மு.க தனது தலையில் நெருப்பை கொட்டிக் கொண்டு தோல்வியைத் தழுவியுள்ளது.

ஜனநாயக அலகில் குடும்ப ஆட்சி என்பது மக்களின் கோபத்தையே அதிகரிக்கும்.தமிழக மக்களின் பெரும்பான்மையினரின் பொழுதுபோக்காக இருக்கும் சினிமாத்துறையை ஒரு குடும்பத்தின் வாரிசுகள் கையகப்படுத்தி அரசியலை வியாபாரமாக்கி, சினிமாக் கலைஞர்கள் தயாரிப்பாளர்கள் வினியோகஸ்தர்கள் மீது தாம் நினைத்ததைச் செய்கின்ற மேலாதிக்கத்தை சூழ்நிலையாக உருவாக்கியமை,தமிழக மீனவர்களின் படுகொலைகளில் தமது எதிர்ப்பை காட்டாமை,அதிலும் தேர்தல் நெருங்கிய காலத்தில் கனிமொழி தலைமையில் போராட்டம் நடத்திய நடிப்பையும் இளந்தலைமுறையினர் தெளிவாக இத்தேர்தலில் காட்டியுள்ளனர்.

இவைக்கப்பால் மத்திய அரசு தமிழ்நாட்டிலிருந்து தி.மு.காவை அப்புறப்படுத்த வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக துல்லியமாக திட்டமிட்டு ஒரு விடயத்தைச் செய்தது.2ஜி அலைக்கற்றை ஊழல் விசாரணையை தேர்தல் அண்மித்த காலங்களில் அரம்பித்து ஒவ்வொரு நாளும் புதிது பதிதாக ஒவ்வொருவராக கைதானதும் மத்திய அமைச்சரை சிறையிலடைத்து ஏன் நடந்தது யார் குற்றவாளி என்பதை மக்களே அனுமானிக்கட்டும் என்று அணுகிய இராஜதந்திர முறை,இந்த ஊழலில் கலைஞர் தொலைக்காட்சி,கனிமொழிவரை சென்ற வலைவிரிப்பு இவையும் தி.மு.காவின் படுதோல்விக்குக் காரணம்.

தி.மு.காவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்தக் கொள்ள விரும்பாத போதும்,தமிழ்நாட்டில் காங்கிரஸ் தோல்வியடையும் எனத் தெரிந்துதான் இந்த கூட்டணியை காங்கிரஸ் கட்சி எற்படுத்தியது.தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மீது மக்கள் வெறுப்:புக் கொண்டிருந்தமை தி.மு.காவையும் பாதிக்கும் அந்தப் பாதிப்பு இப்போதைக்கு தேவை,தமிழகத்தில் காங்கிரஸ் இனிவருங் காலங்களில் எப்படி நிலை நிறத்தலாம் என்பதை பிறகு பார்க்கலாம் என்ற காலத்தை பயன்படுத்திய காங்கிரசின் அணுகுமுறையுந்தான் தி.மு.காவின் தோல்விக்கு காரணம்.

இன்றுள்ள தமிழக மக்களின் மனங்களில் பல கேள்விகள் எழுந்துள்ளன.தொடர்ந்தும் கலைஞரே முதலமைச்சராக இருக்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.கலைஞர் விட்ட மிகப் பெரிய தவறு ஜனநாயகம் என்ற போர்வையில் ஸ்டாலினை முதலமைச்சராக்கியது.மனந்திறந்து தங்கள் உணர்வினை சொல்ல முடியாத மக்கள் தமது மாபெரும் ஆயுதமான வாக்குச் சீட்டினை பயன்படுத்தியுள்ளனர்.

இதில் ஜெயலலிதா ஈழத்தமிழருக்கு தன்னால் என்ன செய்ய முடியும் அதனை எவ்வாறு எதற்கூடாகச் செய்ய முடியும் என்பதை தெளிவாக கூறிவிட்டார்.இங்கே முக்கியமான விடயம் என்னவென்றால் ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைபற்றிய வெளிப்படடையான விடயம் என்னவென்றால் ஈழத்தமிழரிர்கள் என்ற பார்வையை மட்டும் கொண்டு அவர்களின் படுகொலைகள் தொடர்பான ஜ.நா அறிக்கையை கவனத்தில் எடுத்து ஈழத்தமிழர்களுக்கு எப்படி உரிமையைப் பெற்றுக் கொடுக்கலாம் என்பதை உலகம் சிந்திக்கின்றது.இதை;தான் ஜெயலலிதாவும் சிந்திப்பார்.

விடுதலைப்புலிகள் ஈழவிடுதலைக்காக போராடினார்கள் ஆயிரக்கணக்கான மாவீர்கள் மரணத்தை தழுவினார்கள் எனபது உலக இயலில் வெளிப்படைப் பார்வையாக இருக்கவே இருக்காது.அதற்காக விடுதலைப்புலிகளை அங்கீகரிக்காவிட்டால் எமக்கு எந்த தீர்வும் வேண்டாம் என்ற முட்டாள்தனமான முடிவை ஈழத்தமிழர்கள் எடுப்பார்களானால் காலத்தை பயன்படுத்தத்தெரியாத அரசியல் சூன்யமே வெட்ட வெளிச்சமாகும்.

எல்லோர் மனதிலும் விடுதலைப்புலிகள் கௌரவமான இடத்திலேயே இருக்கின்றனர்.ஏன் எதற்கு எவருக்காக என்ற கேள்விகளின் பதிலாக வந்து நிற்பது மக்களுக்காகவே என்பதை உணர வேண்டும்.

தமிழ்நாட்டில் இனிவரப் போகும் அரசியல் யதார்த்தத்தை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் அணுக வேண்டுமே தவிர சோடப் போத்தல் காஸ் மாதிரி எகிறிக் குதித்தால் ஊதிக்கெடுத்த சங்கு மாதிரி இழப்பையே ஈழத்தமிழர் சந்திக்க நேரிடும்.தேர்தல் காலங்களில் ஜெயலலிதா ஈழத்தமிழருக்கா கொடுத்த வாக்குறதிகளை அவர் காற்றில் பறக்கவிடாமலிருப்பதற்கு அவை ஒரு வெற்றி வாய்பு;பக்கான ஒரு மைலகல் என்பதை மிகத் தர்க்க ரீதியாக ஈழ அரசியலாளர்கள் அணுக வேண்டும்,அவரை அணுக வேண்டும்.

அரசியல் என்பதை காலத்தை பயன்படுத்துவதிலேயே தங்கியுள்ளது.தமிழக மக்கள் ஒரு ஊழல் புழுக்கத்திலிருந்து விடுபட்டு சுத்தமான ஜனநாயக காற்றைச் சுவாசிக்கவே ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.ஈழத்தமிழரின் பிரச்சினையில் 25 வீதமான பிரச்சாரமும் இந்த வெற்றிக்கு வழிவகுத்திருக்கின்றது.இந்த 25 வீதத்தை 100 வீதமானது என ஒரு தோற்றத்தை ஈழ அரசியல்வாதிகள் கொண்டு வர வேண்டும்.நாங்கள் இல்லாவிட்டால் நீங்கள் வென்றிருக்கமாட்டீர்கள் என்ற வீர வசனம் பாதகத்தையே ஏற்படுத்தும்.ஈழத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழர் பிரதிநிதிகளையே தமிழர்களின் விரல்கள் சுட்டி நின்று அவர்களுடன் கதையுங்கள் அல்லது கதைபN;பாம் என்ற அணுகுமுறையே ஈழத்தமிழரின் உரிமைக்கான வாயப்;பை ஏற்படுத்தும்.

ஈழத்தமிழர்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசையோ மற்றை அமைப்புகளையோ வலுவாகச் சுட்டிக்காட்டி இவர்களுடன் பேசுங்கள் என உடனடியாகச் செயல்படக்கூடாது. ஈழத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்மக்கள் பிரதிநிதிகளை நிராகரிக்க புலம்பெயர் - ஈழ அரசியலாளர்கள் முயற்சித்து, இருக்கிறதைக் கெடுத்த கதையாதகி விடாது பார்த்துக் கொள்வதே ஈழத்தமிழருக்கு நன்மையளிக்கும்.

நாடு கடந்த அரசு எப்படி தமிழக அரசை அணுகும் என்பது அவர்களுக்குத் தெரியும்.எதுவாக இருந்தாலும் ஈழத்தமிழர் அரசியல் முற்றிலும் புதிய அணுகுமுறையைக் கையாள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் வெற்றி ஈழத்தமிழருக்கான மகிழ்ச்சி அறிகுறியல்ல.இனி அரசியலை நகர்த்த வேண்டிய அவதான அறிகுறி.ஜெயலலிதாவின் வெற்றி அவருக்கு ஒரு எச்சரிக்கை சமிக்ஞை

க.வ.ஜெயதாசன்

http://www.globaltamilnews.net

கருத்துகள் இல்லை: