அ.தி.மு.க., அமைச்சரவையில், 27 முதல் 36 பேர் வரை இடம் பிடிப்பது உறுதியாகியுள்ளது. புதுமுகங்களில், 13 பேர் வரை இடம்பெறுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2001-06 வரையிலான அ.தி.மு.க., அமைச்சரவையில், ஜெயலலிதா உட்பட 36 பேர் இடம் பெற்றிருந்தனர். இதே அளவிற்கு, இப்போதும் அமைச்சரவை ஏற்படுத்தப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளையும் அ.தி.மு.க., கூட்டணி கைப்பற்றியுள்ளதால், அம்மாவட்டத்திற்கு, அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. முஸ்லிம் சமுதாய மக்கள் அதிகம் நிறைந்த வேலூர் மாவட்டத்தில் இருந்தும், அமைச்சர் தேர்வு செய்யப்படுவார். ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் ஒரு அமைச்சர் பதவி கிடைக்கலாம்.
கருப்பையாவுக்கு சபாநாயகர் பதவி?தி.மு.க.,வின் கோட்டை என கூறப்பட்டு வந்த சென்னை மாவட்டத்தில், மொத்தம் உள்ள 16 தொகுதிகளில், 14 தொகுதிகளை அ.தி.மு.க., கூட்டணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. எனவே, அமைச்சரவையில், சென்னை மாவட்டத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. இதில், துறைமுகம் தொகுதியில் வெற்றி பெற்ற பழ.கருப்பையாவுக்கு சபாநாயகர் பதவி அளிக்கப்படலாம் என, கூறப்படுகிறது.
http://www.dinamalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக