தமிழக முதலமைச்சராக அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதா நாளை நண்பகல் 12.15 மணியளவில் பதவியேற்க உள்ளார்.
சென்னையில் ராயப்பேட்டையில் உள்ள அ.இ.அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் ஜெயலலிதாவை அ.இ.அ.தி.மு.க சட்டப்பேரவைத் தலைவராக தேர்ந்தெடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துடன் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஜெயக்குமார் ஆகியோர் போயஸ் தோட்டம் சென்றனர்.
பின்னர் ஆளுநரைச் சந்தித்த ஜெயலலிதா, அ.இ.அ.தி.மு.க சட்டப்பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்மான நகலை அவரிடம் அளித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இதையடுத்து முதலமைச்சராகப் பதவியேற்குமாறு ஆளுநர் அவருக்கு அழைப்பு விடுத்தார். ஆளுநரின் அழைப்பைத் தொடர்ந்து ஜெயலலிதா நாளை நண்பகல் 12.15 மணியளவில் முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொள்வார் என தலைமைச் செயலர் மாலதி அறிவித்துள்ளார்.
http://tamil.webdunia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக