திங்கள், 2 மே, 2011

ஐ.நா.வின் அறிக்கை: இந்திய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் தமிழ்நாடு மாநிலம்

விடுதலைப் புலிகளுடனான போரின் இறுதிக் கட்டத்தில் சிறிலங்காவினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் மத்திய அரசாங்கத்தின்மீது அழுத்தத்தை அதிகரிப்பதற்கு தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன.

ஆயிரக் கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டமைக்கு பொறுப்பானவர்களை விசாரணை செய்வதற்கு ஏற்றவகையில் அனைத்துலக செயற்பாடுகள் அமைவதை இந்தியா உறுதிப்படுத்தவேண்டும் என தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் விரும்புகின்றன.

போர்க்குற்ற விசாரணை நடாத்தப்படவேண்டும் எனக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.

சிறிலங்கா இராணுவத்தாலும் விடுதலைப்புலிகளாலும் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் நம்பகமான ஆதாரங்களுடன் ஐ.நா.வின் வல்லுநர்குழு முன்வைத்ததைத் தொடர்ந்து மகிந்த ராஜபக்ச மற்றும் அதனுடன் தொடர்புபட்ட அனைவருக்கும் எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.

ஆளும் கட்சியான தி.மு.க மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அஇஅதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் இந்தக் கோரிக்கையை முன்வைத்து ஏற்கனவே ஆர்ப்பாட்டங்களையும் நடாத்திவிட்டன.

இந்த ஆர்ப்பாட்டங்களில் அதிபர் ராஜபக்சவின் உருவப் பொம்மை தொடர்ந்தும் தீயிடப்பட்டு அல்லது தூக்கிலிடப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை: