வியாழன், 28 ஏப்ரல், 2011

சாய்பாபா மரணம் இயற்கையானது; ஆந்திர அரசு அறிவிப்பு

சாய்பாபா கடந்த மாதம் 28-ந்தேதி புட்டபர்த்தி சத்யசாய் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் சபயா தினமும் அறிக்கை வெளியிட்டார். அப்போது அவர், சாய்பாபாவின் உறுப்புகள், மருந்துகளை ஏற்று நன்றாக செயல்படுகின்றன. ஆனால் அவர் கவலைக்கிடமாக உள்ளார் என்று கூறினார்.
இது சாய்பாபா பக்தர்களிடம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து கடந்த 18-ந்தேதி தலித் ஜனசபை அமைப்பு தலைவர் கரம் சந்த் ஆந்திர மனித உரிமை ஆணையத்தில், சாய்பாபாவுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சையில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. இதில் மனித உரிமை ஆணையம் தலையிட்டு சாய்பாபாவுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றார்.
இதை விசாரித்த மனித உரிமை ஆணைய தற்காலிக தலைவர் பெத்தபெரிரெட்டி, மாநில அரசு உரிய விளக்கம் அளிக்கும்படி நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். இதற்கு விளக்கம் அளித்த அரசு, சாய்பாபாவுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. என்று தெரிவித்தது. இந்நிலையில் சாய்பாபா கடந்த 24-ந்தேதி காலை மரணம் அடைந்தார்.
இதையடுத்து மாநில மனித உரிமை ஆணையத்துக்கு சாய்பாபா மரணம் பற்றி பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதுபற்றி எங்களுக்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளன. இதற்கு மாநில அரசு உரிய விளக்கம் அளித்து பொது மக்களின் சந்தேகத்தை தீர்க்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு ஆந்திர மாநில தலைமை செயலாளர் ரமேஷ் மனித உரிமை ஆணையத்தில் விளக்கம் அளித்தார்.
அதில் சாய்பாபா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்தே மாநில அரசு அதிகாரிகள் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்களை நேரடியாக கண்காணித்து வந்தனர். சாய்பாபாவின் மருத்துவ அறிக்கை முழுவதையும் நாங்கள் பார்த்து விசாரணை நடத்தினோம். அவரது சாவில் மர்மம் எதுவும் இல்லை. அவரது மரணம் இயற்கையானதுதான். சில பக்தர்கள் சாய்பாபா அறக்கட்டளை உறுப்பினர்கள் மீது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளையே கூறி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: