ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை தொடர்பாக அவசர ஆலோசனை நடத்த வருமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.
தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமையே கொழும்பு திரும்பவுள்ளார்.
இந்தநிலையில் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்திக்க, மகிந்த ராஜபக்ச விரும்புவதாக சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இருந்து அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாடு திரும்பிய பின்னர் ரணில் விக்கிரமசிங்க, தனியாகச் சென்று மகிந்த ராஜபக்சவைச் சந்திப்பாரா அல்லது ஐதேக குழுவொன்றுடன் சென்று சந்திப்பாரா என்பது இன்னமும் உறுதியாகவில்லை.
எதிர்க்கட்சித் தலைவருடன் இணைந்து ஐ.நாவுக்கு பதிலளிக்கும் வகையிலான கூட்டறிக்கை ஒன்றை வெளியிடவே சிறிலங்கா அதிபர் விருப்பம் கொண்டுள்ளதாக ஆளும்கட்சி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக