சிறிலங்கா அரச நிறுவனங்கள் பிடுங்கிக் கொண்ட, இந்தியா வழங்கிய உழவு இயந்திரங்களை கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் தலையிட்டு வடபகுதி விவசாயிகளுக்கு மீள வழங்கியுள்ளது.
வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்குவதற்கென இந்திய அரசாங்கம் 600 மில்லியன் ரூபா பெறுமதியான 500 உழவு இயந்திரங்களை வழங்கியிருந்தது.
இவற்றில் 200 உழவு இயந்திரங்களை சிறிலங்கா அரச நிறுவனங்களான தென்னை அபிவிருத்திச் சபையும், அரச மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனமும் பிடுங்கிக் கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தனர்.
மேலும் 100 உழவு இயந்திரங்களை ஏனைய அரச நிறுவனங்களுக்கு அனுப்பும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் குற்றம்சாட்டியிருந்தது கூட்டமைப்பு.
இந்தச் செய்தி ஊடகங்களில் வெளியானதை அடுத்து கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் விசாரணைகளை நடத்தியதுடன் வடபகுதி விவசாயிகளுக்கு அனைத்து உழவு இயந்திரங்களையும் அனுப்பி வைக்குமாறும் சிறிலங்கா அரசிடம் கூறினார்.
இதையடுத்தே 500 உழவு இயந்திரங்களும் வடபகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்துக்கு 109 உழவு இயந்திரங்களும், முல்லைத்தீவுக்கு 112 உழவு இயந்திரங்களும், கிளிநொச்சிக்கு 110 உழவு இயந்திரங்களும், மன்னாருக்கு 100 உழவு இயந்திரங்களும், வவுனியாவுக்கு 69 உழவு இயந்திரங்களும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக