சனி, 23 ஏப்ரல், 2011

ஈஸ்டர் விடுமுறைக்குப் பின்னரே நிபுணர் குழுவின் அறிக்கை - ஐ.நா அறிவிப்பு

ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை ஈஸ்டர் விடுமுறைக்குப் பின்னரே வெளியிடப்படும் என்று ஐ.நா பொதுசெயலரின் பதில் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த அறிக்கை இந்தவாரம் வெளியிடப்படும் என்று நேற்றுமுன்தினம் மாலை பர்ஹான் ஹக் கூறியிருந்தார்.

எனினும் ஈஸ்டர் விடுமுறைகளுக்கு பின்னர் அடுத்தவாரமே நிபுணர் குழு அறிக்கை வெளியிடப்படும் என்று அவர் தற்போது அறிவித்துள்ளார்.

அதேவேளை, இந்த அறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் வெளியிட வேண்டாம் என்று ஐ.நாவிடம் கேட்டுக் கொண்ட போதும் அந்த வேண்டுகோளை ஐ.நா நிராகரித்துள்ளது.
நிபுணர்குழுவின் அறிக்கை முழுமையாக- திருத்தங்கள் ஏதும் செய்யப்படாமல் விரைவில் வெளியிடப்படும் என்பதில் ஐ.நா உறுதியாக இருப்பதாகவும் பர்ஹான் ஹக் மேலும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: