ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான நிபுணர் குழு அறிக்கையின் பரிந்துரைகளில் சிறிலங்கா அரசாங்கமோ அல்லது சர்வதேசமோ தடங்கலை ஏற்படுத்துவதற்கோ அல்லது தலையிடுவதற்கோ அனுமதிக்கக்கூடாது என்றும் கண்காணிப்பகம் கேட்டுள்ளது. நிபுணர் குழுவின் அறிக்கைப்படி சிறிலங்காபடையினரும் விடுதலைப்புலிகளும் இறுதிப்போரின் போது சர்வதேச மனித உரிமைக்கோட்பாடுகளை மீறினர் என்று கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் போர் நிறைவடைந்த கடந்த இரண்டு வருடக்காலப்பகுதியில் சிறிலங்கா அதிபர் ஜனாதிபதி, ஐக்கிய நாடுகளின் செயலாளருக்கு வழங்கிய உறுதிமொழியையும் நிறைவேற்ற தவறிவிட்டார். அதேநேரம் படையினர் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவும் அதிபர் மகிந்த ராசபக்ச முன்வரவில்லை.
இவ்வாறான சூழ்நிலையில் ரஸ்யாவும் சீனாவும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டால், ஏனைய நாடுகள் நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்கு ஆதரவாக செயற்படவேண்டும் என்று கண்காணிப்பகம் கோரியுள்ளது. எனவே பான் கீ மூன் தமது நிபுணர் குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் நடவடிக்கை எடுத்து, சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப்பிராந்திய தலைவர் பிரட் அடம்ஸ் கோரியுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக