கடந்த 12ஆம் தேதி பான் கி மூனிடம் ஐ.நா.நிபுணர் குழு உறுப்பினர்களான மார்சுகி தாருஸ்மான், யாஷ்மின் சூக்கா, ஸ்டீவன் ராட்னர் ஆகியோர் கொண்ட குழு தங்களது அறிக்கையை அளித்தது. அந்த அறிக்கையை அடுத்த 2 நாட்களில் சிறிலங்க அரசிற்கு அளித்தார் பான் கி மூன். அறிக்கையின் மீதான சிறிலங்க அரசின் கருத்தைப் பெற்று, அதனையும் அறிக்கையுடன் வெளியிடவே பான் கி மூன் விரும்பியதாக ஐ.நா.பொதுச் செயலரின் பேச்சாளர் நெசிர்ஸ்கி கூறியிருந்தார். ஆனால் நிபுணர் குழு அறிக்கை மீதான தனது நிலையை சிறிலங்க அரசு தரவில்லை. இந்த நிலையிலேயே அறிக்கை திங்கட்கிழமை வெளியிடப்பட்டது.
அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் அதனை ஐ.நா.வின் அதிகாரமிக்க பாதுகாப்புப் பேரவை உறுப்பினர்களுக்கு பான் கி மூன் விளக்கியுள்ளார். இரகசியக் கூட்டமாக நடந்த இக்கூட்டத்தில், �இலங்கையில் தேச இணக்கப்பாடும், அமைதியும் ஏற்படும் என்ற நம்பிக்கையுடன் அறிக்கையின் மீதான அந்நாட்டு அரசின் பதிலை எதிர்பார்த்திருந்தேன்� என்று பான் கி மூன் கூறியுள்ளார்.
அறிக்கை வெளியிடப்பட்டதற்கான காரணத்தை விளக்கிய பான் கி மூன், �நடந்த குற்றங்களுக்கான பொறுப்பை நிர்ணயிப்பதும், ஐ.நா.வின் நடவடிக்கைகள் வெளிப்படையானது என்பதை உறுதிசெய்யும் முகத்துடனே அறிக்கை வெளியிடப்பட்டது� என்று கூறியுள்ளார்.
ஐ.நா.நிபுணர் குழு அளித்துள்ள அறிக்கையை தான் மிக ஆழமாக படித்துவருவதாகவும், ஐ.நா.பாதுகாப்புப் பேரவை உறுப்பினர்களும் அதனை முழுமையாகப் படிக்க வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் பான் கி மூன் கூறியுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக