புதன், 27 ஏப்ரல், 2011

ஐ.நா அறிக்கையை கவனமாக ஆராய்கிறதாம் இந்தியா

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா நிபுணர்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையை கவனமாக ஆராய்ந்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் நேற்று புதுடெல்லியில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

“இந்த அறிக்கையை கவனமாகப் படிக்க வேண்டிய தேவையுள்ளது. இது முதலாவது கட்டம்.

அடுத்து இந்த விவகாரம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் விரைவில் இந்தியா தொடர்பு கொண்டு பேசும்“ என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சு பேச்சாளர் கூறியுள்ளார்.

அதேவேளை, இந்த அறிக்கை குறித்து இந்தியா மௌனமாக இருப்பது சிறிலங்காவுக்கு எரிச்சலூட்டியிருப்பதாக சிறிலங்கா அதிகார வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

1 கருத்து:

ராஜ நடராஜன் சொன்னது…

இப்போதைக்கு மதில் மேல் பூனை மாதிரிதான் இந்திய நிலை.ஐ.நா அறிக்கை இலங்கை அரசுக்கு மட்டுமல்ல பிரச்சினை.இந்தியாவுக்கும் வெளியுறவுக்கொள்கை,வாக்கெடுப்பு நிகழ்ந்தால் எந்த மாதிரியான முடிவு எடுக்க வேண்டும் என பல சிக்கல்களில் இந்தியாவும் சிக்கியுள்ளது.எனவே மொத்த அறிக்கையையும் வாசித்து அடுத்த கட்ட நிலை பற்றி யோசிப்பதற்கு இந்தியாவிற்கு நேரம் தேவைப்படும் என்ற கருத்து சரியே.

சிவா!பதிவுகள் போடுவதோடு பின்னூட்டக் கலந்துரையாடலே உங்கள் கருத்துக்கு வாசகர்களை இழுக்கும்.இல்லையெனில் ரன் எடுக்க இயலாத விரக்தியில் ஆட்டத்தை வெகு விரைவில் முடித்துக் கொள்வீர்கள். ஆள் இல்லாத கடைல சாயா ஆத்துவது என்று பதிவுலகில் இதற்கு பெயர்:)