செவ்வாய், 19 ஏப்ரல், 2011

ஐ.நா பாதுகாப்புச் சபையில் சிறிலங்கா விவகாரம்

ஐ.நா நிபுணர்கள் குழு சமர்ப்பித்த அறிக்கை குறித்து ஐ.நா பாதுகாப்புச்சபையில் ஆராயப்படவிருப்பதாக நியுயோர்க் தகவல்கள் தெரிவித்தன.

சிறிலங்கா விவகாரம் குறித்தும், ஐ.நா பொதுச்செயலரின் அரசியல் விவகாரச் செயலர் லைன் பாஸ்கோவின் கட்டார், கெய்ரோ பயணம் குறித்தும் ஆராய்வது தொடர்பான நிகழ்ச்சிநிரல் முன்வைக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

ஐ.நாவின் அரசியல் விவகாரத் திணைக்களம் இந்த நிகழ்ச்சி நிரலை சமர்ப்பித்திருந்ததாக ஐ.நா பாதுகாப்புச் சபையின் இரு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

2009இல் போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா விவகாரம் தொடர்பாக ஆராய கோஸ்டாரிக்காவும் மெக்சிக்கோவும் ஐ.நா பாதுகாப்புச் சபையில் கொண்டு வந்த தீர்மானத்தை ரஸ்யாவும் சீனாவும் ஏனைய நாடுகளும் தடுத்திருந்தன.

இதன்பின்னர் ஐ.நா பாதுகாப்புச் சபையில் சிறிலங்கா விவகாரம் தொடர்பாக முறைப்படியாக அல்லாமல்- அதிகாரபூர்வமற்ற வகையிலேயே ஆராயப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா விவகாரம் ஐ.நா பாதுகாப்புசபையில் எடுத்துக் கொள்ளப்படுவது குறித்து ஐ.நா பாதுகாப்புச் செயலரின் அரசியல் விவகாரச்செயலர் லைன் பாஸ்கோவும் நேற்றுமாலை 3 மணியளவில் (நியுயோர்க் நேரம்) உறுதிப்படுத்தியிருந்தார்.

கருத்துகள் இல்லை: