வியாழன், 21 ஏப்ரல், 2011
சாய்பாபா உடல்நிலை கவலைக்கிடம்
புட்டப்பர்த்தி சாய்பாபா உடல்நிலை மிக மோசமடைந்துள்ளதாக ஸ்ரீ சத்யசாய் அறிவியல் மற்றும் உயர் மருத்துவ கழக மருத்துவமனை இயக்குனரும், டாக்டருமான சபையா தெரிவித்துள்ளார். இன்று காலை வெளியிடப்பட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சாய்பாபாவுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி இவருடைய உறுப்புகளின் செயல்பாடுகள் செயல் இழந்து வருகின்றன. கல்லீரல் செயல்பாடு பாதிக்கப்பட்டதை அடுத்து இரத்த அழுத்தம் மிக குறைந்து வருகிறது. இது கவலை அளிப்பதாகவும், சுவாசக்கோளாறு காரணமாக அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. சாய்பாபா கடந்த 28 ம்தேதி சுவாசக்கோளாறு மற்றும் இருதய பாதிப்பு காரணமாக சாய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக